சேலம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு முடிவடைந்தையடுத்து அதிகாலையில் 4 மணிக்கே பேருந்துகள் இயக்கப்பட்டன.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் இரவு 9 மணிக்கு நகை கடை, மளிகை கடைகள் மற்றும் ஓட்டல்கள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
இதனனையடுது 10 மணிக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் இரவு நேர ஊரடங்கு முடிவடைந்ததை தொடர்ந்து அதிகாலை 4 மணி முதல் சேலத்திலிருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அப்போது குறைந்த பயணிகளே பயணம் செய்துள்ளனர்.