செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மகளிர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாதவாறு அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கட்டணம் இல்லாத மகளிர் பயணத்தின் மூலமாக 173 கோடி பெண்கள் பயன் பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்திற்கு அரசு நிதி உதவி வழங்குவதால் போக்குவரத்து கழகங்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் இல்லை.
இந்த திட்டத்தை மேலும் சிறப்பிக்க ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல சென்று வரக்கூடிய காலை மாலை இரண்டு வேளைகளிலும் பள்ளி மாணவர்கள் சென்று வருவதற்கு வசதியாக பேருந்துகள் பற்றாக்குறை ஏற்படாத விதமாக பள்ளி கல்வித்துறை ஆலோசனையுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.