Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் குழந்தைகளுக்கு இலவசம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

போக்குவரத்து துறை அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்ட எஸ்.எஸ்.சிவசங்கர் துறை மூலமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பேருந்துகளில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயண சீட்டு இல்லாமல் பயணிக்கலாம். மேலும் 3 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை கட்டணம் செலுத்தி பயண சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தற்போது இதில் மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

அதாவது மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம் என்று இருந்ததை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் இலவச பயணம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான அரசு பேருந்துகளுக்கும் இது பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே திமுக ஆட்சிக்கு வந்த அன்றே பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |