பேருந்தில் பள்ளி சிறுவனுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த கைலி வியாபாரியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் 15வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏற்றியுள்ளார். அப்போது பேருந்தில் அருகே அமர்ந்திருந்த முதியவர் திடீரென பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த முதியவர் கீழக்கரை பகுதியை சேர்ந்த கைலி வியாபாரி சகுபர்ஜமாலுதீன்(57) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.