தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் தேனிக்கோட்டையில் இருந்து தர்மபுரிக்கு வந்த அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி செல்ல தயாராக இருந்தது. அப்போது பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த ஒரு இளம்பெண் 2 வயது பெண் குழந்தையை முன் பக்க இருக்கையில் போட்டுவிட்டு கீழே இறங்கி சென்றார். அதன் பிறகு பேருந்த புறப்பட தயாரான நேரத்தில் குழந்தை அழுதது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோரை சக பயணிகள் தேடிய போது அவர்கள் கிடைக்கவில்லை. அதனால் பேருந்து நிலையத்தில் இருந்த உதவி மையத்தில் குழந்தையை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஒப்படைத்தனர்.
அதன்பிறகு தர்மபுரி நகர காவல் நிலைய ஆய்வாளர் நவாஸ் உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து குழந்தையை விட்டு சென்ற இளம்பெனை தேடி வருகின்றனர். இதற்கிடையில் குழந்தையின் அழுகையை தேற்றிய பெண் காவலர்கள் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு தோப்பூரில் உள்ள தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டதனர். அதே நேரத்தில் குழந்தை விட்டு சென்ற இளம் பெண்ணை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழந்தை கடத்தப்பட்டதா? இல்லை குடும்ப பிரச்சினை காரணமாக விட்டுச் சென்றாரா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.