Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பேருந்தில் ஏற முடியாமல் தவித்த மாணவர்கள்…. கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

மாணவர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காந்திகுப்பம், ஏமாப்பூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் பள்ளி, கல்லூரிக்கு பேருந்துகளில் சென்று வருகின்றனர். நேற்று காலை 8:30 மணிக்கு கொங்கராயநல்லூரில் இருந்து அரசு பேருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பையூர் பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது சில மாணவர்கள் பேருந்தில் ஏற முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.

அப்போது ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் கோபமடைந்த மாணவர்கள் கற்களால் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதனால் ஓட்டுநர் பேருந்து ஓரமாக நிறுத்திவிட்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை சரி செய்த பிறகு பேருந்து அங்கிருந்து புறப்பட்ட சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |