Categories
தேசிய செய்திகள்

பேரறிவாளனுக்கு ஜாமீன்…. மத்திய அரசின் எதிர்ப்பையும் மீறி கிடைத்த வெற்றி….!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின் இன்று மனு அனுப்பினார். அதனை பரிசீலித்த முதல்வர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு மே இருபத்தி எட்டாம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரது பருவகாலம் நீட்டிக்கப்பட்டு இறுதியாக கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதி ஒன்பதாவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டு  தற்போது பிணையில் வெளியில் உள்ளார். இந்நிலையில்  பேரறிவாளன் தற்போது சிறை விடுப்பில் இருக்கும் நிலையில் பரோடி லிருந்தும் கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளது என்று சுட்டிக்காட்டி மனுத்தாக்கல் செய்திருந்தார். விசாரணையில் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரித்து வருவதால் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து சிபிஐ விசாரித்து வருவது குறித்து பின்னர் முடிவெடுக்கலாம். ஜாமீன் வழங்குவது என நாங்கள் தீர்மானமாக உள்ளோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |