Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பேரதிர்ச்சி கொடுத்த கொரோனா…. இந்த மாவட்டத்திற்கு முக்கிய அறிவிப்பு …!!

மதுரையில் இன்று காலை வரை மட்டுமே 320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1077 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலியானோர் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1603 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மதுரையில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.

இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசும்போது, மதுரையில் செயல்படுத்தப்பட்டு வரும் காய்ச்சல் முகாம் நல்ல பலனை கொடுத்துள்ளது. இதனால் கொரோனா அறிகுறி உள்ள ஏராளமானோர் முன்னதாக கண்டறிந்து, சிகிச்சை அளிக்க இந்த ஊரடங்கு பயனுள்ளதாக இருந்தது. இந்த புள்ளி விவரங்களை எல்லாம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று ஊரடங்கு மேலும்  ஊரடங்கை நீடிக்க பரிந்துரை செய்வோம் என்று தெரிவித்திருந்தார். இதனால் மதுரையில் மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் இன்று காலை மட்டும் 320 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது மதுரை மாவட்ட மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |