Categories
சினிமா தமிழ் சினிமா

பேய்களுடன் காமெடி செய்து கலக்கும் சிவா… தெறிக்கவிடும் ‘இடியட்’ பட டிரைலர்…!!!

நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகர் சிவா சென்னை 28 படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதைத்தொடர்ந்து தமிழ் படம், தில்லுமுல்லு, கலகலப்பு, வணக்கம் சென்னை, யா யா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் இடியட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும் ஊர்வசி, மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இடியட்  படத்தின் கலகலப்பான ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விரைவில் இந்த படம் வெளியாகவுள்ளது.

Categories

Tech |