முல்லைபெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை அருகில் உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில் திடீரென்று அந்த அனுமதியை கேரளா அரசு ரத்து செய்துள்ளது.
பேபி அணையை வலுப்படுத்த அதனை சுற்றியுள்ள 15 மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு கேரளா அனுமதி வழங்கியதால் கேரளாவில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்த அனுமதியை கேரள அரசு ரத்து செய்துள்ளது. இதனால் தமிழக அரசு பேபி அணையை வலுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.