Categories
தேசிய செய்திகள்

பேன் கடித்து 30 பேர் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பேன் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம் ஊராட்சி பொன்னமலை பகுதியில் பேன்களின் தாக்குதல் கடுமையாக உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள மிளகுத்தோட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளை பேன்கள் கடித்துள்ளது. குரங்குகள் மற்றும் காட்டுப்பன்றிகளில் காணப்படும் ஒரு வகை பேன்கள் பெரும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

பலருக்கு உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. பேன் கடித்த பகுதி சிவந்து வீங்கி ஒரு வாரத்திற்கு வலியுடன் அரிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் பட்டம் காலனி ஆரம்ப சுகாதார நிலையம் தலைமையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. பருவநிலை மாற்றம் மற்றும் வன எல்லையை ஒட்டியுள்ள புல்வெளிகளின் நிலப்பரப்பு ஆகியவை பேன்களின் பெருக்கத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், உடல்நிலை சரியில்லாமல் அல்லது காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |