Categories
சென்னை மாநில செய்திகள்

பேனர்களை எல்லாம் வேகமா அகற்றுங்கள்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

நிவர் புயல் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் பேனர்களை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நிவர் புயல் தற்போது கடலூரில் இருந்து 290 கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரியில் இருந்து 300 மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரம் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு முதல் நாளை நண்பகல் வரை புயல் கரையைக் கடக்கலாம் என்று நம்பப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது சுமார் 120 கிலோமீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று பதிவாகும். தொடர் மழையின் காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் தமிழக அதிகாரிகளுக்கு அவசர கடிதம் எழுதியுள்ளது. தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக 10 11 12 13 பகுதியில் உள்ளவர்களுக்கு முகாம்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இதன் காரணமாக 169 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அனைத்தும் இன்று 12 மணிக்குள் நீக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அவை நீதிமன்ற உத்தரவின் பேரில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக அகற்றப்பட உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |