Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பேட்டிங் சரியில்ல… எனக்கு தெரியும்… “டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகுவேன்… கேப்டன் மோர்கன் முடிவு!!

பேட்டிங்கில் சிறப்பாக செய்யவில்லை என்றால் அணியில் இருந்து வெளியேறுவேன்  என பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன்.

7ஆவது  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல் கட்டமாக ஒரு புறம் தகுதி சுற்று போட்டிகளும், மறு புறம் பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.. இன்னும் சில நாட்களில் முன்னணி போட்டிகள் நடைபெற இருக்கிறது.. இந்த உலகக்கோப்பை தொடரில் எந்த அணி உலக கோப்பையை கைப்பற்றும் என்று பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

ஏனென்றால் அனைத்து அணிகளுமே வலுவான நிலையில், இருப்பதால் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்றே தெரியாத நிலை இருக்கிறது.. அதே சமயம் கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை தட்டி தூக்கிய இங்கிலாந்து அணி, இந்த டி20 உலகக் கோப்பையையும் கைப்பற்ற போராடும் என்பதில் சந்தேகமில்லை.  கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையின் போது கேப்டனாக இயான் மோர்கன் சிறப்பாக செயல்பட்டார்.. இந்த முறையும் அவர் தான் கேப்டனாக செயல்பட இருக்கிறார். ஆனால் அவரின் செயல்பாடு கடந்த சில மாதங்களாக சரியாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

2021ஆம் ஆண்டில் 40 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி 499 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் மோர்கன்.. இந்த மோசமான ஆட்டம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் எதிரொலித்தது.. அவர் கேப்டன்சி சிறப்பாக செய்தாலும், பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் திணறி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.. இப்படி தொடர்ந்து சொதப்பி வரும் மோர்கன் இந்த டி20 தொடரில் இருந்து வெளியேற வேண்டும் என்று இங்கிலாந்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்..

இந்த நிலையில் இதுகுறித்து கேப்டன் மோர்கன் பேசுகையில், நான் எப்பொழுதும் சொன்னதை போலவே இப்போதும் சொல்கிறேன்.. அணியில் நான் ஒரு நிரந்தர வீரர் இல்லை.. வாய்ப்புக்குரிய வீரர் தான்.. அணி செல்லும் பாதையில் நான் தடையாக இருக்கமாட்டேன்.. என்னுடைய பேட்டிங் மோசமாக இருப்பது எனக்கு தெரியும்.. என்னால் ரன்கள் சேர்க்க முடியவில்லை..

ஆனால் என்னுடைய கேப்டன்சி சூப்பராக இருக்கிறது.. எந்த ஒரு தருணத்திலும் இங்கிலாந்து அணிக்கு எனது கேப்டன்சி குறைவாக இருக்காது. அது அப்படியே செல்லும் என்பதுதான் எனது பதில்… அதே நேரம் எனது பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து மோசமாக செல்லும் பட்சத்தில்  நிச்சயம் விலகுவேன் என்று பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.

Categories

Tech |