ரஷ்யாவுடனான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானது என உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 22 வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் இருநாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு கிடைக்காத நிலையில், போரை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் விரைவில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் ரஷ்யாவுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலாக இருக்கிறது. மேலும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது கடினம் எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.