Categories
அரசியல் மாநில செய்திகள்

பேசும் போது பவர் கட்…. கடுப்பான அமைச்சர்…. 2 பேர் பணியிடமாற்றம்….!!!!

அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் தான் படித்த அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்தார். அப்போது மேடையில் பேசிய அவர் 70 ஆண்டுகளுக்கு முன்பு தான் படித்த பள்ளி என்பதால், மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நீண்ட நேரமாக மின் இணைப்பு வராத‌தால் கடுப்பான அமைச்சர், இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.

பின்னர், அவசர அவசரமாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு சென்றார். இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் பேசிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் 2 பேர் பணியிடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.காட்பாடி தாராபடவேடு பகுதி துணை மின்நிலைய உதவி பொறியாளர்கள் சிவகுமார் ,கருணாநிதி பணியிடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்

Categories

Tech |