Categories
இந்திய சினிமா சினிமா

“பேசியபடி சரியாக சம்பளம் கொடுக்கல”…. நடிகர் பாலா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

மலையாளத்தில் சென்ற சில நாட்களுக்கு முன் ஷபீக்கிண்டே சந்தோசம் என்ற திரைப்படம் வெளியாகியது. சீடன், பாஹமதி, யசோதா ஆகிய படங்களில் நடித்த மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தையும் அவரே தயாரித்து இருந்தார். மேலும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் டைரக்டர் சிவாவின் தம்பியான பாலா நடித்தது இருந்தார். இத்திரைப்படம் வெளியான நாளில் இருந்தே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தனக்கும் இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பேசியவாறு சம்பளம் வழங்கப்படவில்லை என நடிகர் பாலா குற்றம்சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தில் பணிபுரிந்த பிரபல நடிகர் சித்திக்கின் மகன் சாஹீனுக்கு கூட இன்னும் சம்பளம் கொடுக்கப்படவில்லை என தனது மனக்குமுறலை நடிகர் பாலா குற்றச்சாட்டாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது இந்த பேச்சு மலையாள திரையுலகில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |