Categories
அரசியல்

பேசாம எங்க கிட்ட கொடுங்க… நாங்க ரெடியா இருக்கோம்… மணிமண்டபம் கேட்கும் பாஜக… ஸ்டாலினுக்கு அண்ணாமலை கோரிக்கை …!!

காமராஜர் மணிமண்டபத்தை பாஜகவிடம் கொடுதால் முறையாக பராமரிக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று காமராஜர் நினைவு தினத்தில் சென்னையில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ்காரர்கள் இந்த ரோட்டை தாண்டி இங்கேயும் அங்கேயும் போகிறார்கள் யாரும் உள்ளே வந்து நம்முடைய கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் இன்றைக்கு ஏர்போட் போய் விமானத்தை பிடித்து மதுரைக்கு செல்கிறார் அவரும் கூட வந்திருக்கவேண்டும். இந்த மாமனிதனுக்கு அவருடைய 46-வது நினைவு நாள் அஞ்சலி செலுத்த வேண்டும்.

இதை வந்து பார்க்கும்போது இதனுடைய மணிமண்டபம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள் மிகவும் சிதிலமடைந்த நிலையில் ஒரு பெயிண்டிங் கூட சரியா பண்ணாமல் நாம் வைத்திருக்கிறோம். அதனால் தமிழக அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாங்கள் கோரிக்கை வைத்து இருக்கின்றோம். உங்களால் செய்ய முடியவில்லை என்றால் எங்களுக்கு கொடுத்து விடுங்கள் பாரதிய ஜனதா கட்சி இதை மக்கள் இயக்கமாக மாற்றி அடுத்த வருடம் இதே நாளில், இதே இடத்தில் மாபெரும் மணிமண்டபத்தை  கட்டி அவருடைய வாழ்க்கை வரலாற்றை கண்காட்சி போல் ஏற்பாடு செய்து மக்கள் இங்கே வந்தாலும் கூட இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் 1954-ல் இருந்து 1963 வரை தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருந்தாரா?

அப்படிப்பட்ட மாமனிதராக என்று தெரியும் அளவிற்கு நாங்கள் அதைச் செய்கிறோம். ஆனால் தமிழக அரசு எல்லா தலைவர்களுக்கும் 39கோடி ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் கட்டி இருக்கிறார்கள் தவறு கிடையாது. ஆனால் முக்கியமான ஒரு தலைவரை இருட்டடிப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தமிழக அரசு செய்தால் சந்தோஷம் செய்யவில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சி எடுத்து செய்வதற்கு தயாராக இருக்கின்றோம் என்பதையும் கூட இந்த அருமையான நாளிலே பதிவு செய்ய விரும்புகின்றேன்.

அது மட்டுமல்ல நம்முடைய மகாத்மா காந்தி ஐயாஅவர்கள் ஜெயந்தியில் நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியுடன் தொண்டர்கள், தலைவர்கள் காதி கடைகளுக்கு சென்று ஆடைகளை வாங்கி அதை மக்களுக்கு பரிசாக கொடுத்து இருக்கிறோம். நாங்களும் கூட ஆடையை உடுத்துவதற்கு தயாராக இருக்கின்றோம் உண்மையாகவே இது செய்யும்போதுதான் மகாத்மா காந்தி அவர்களுடைய ஜெயந்தியில் நாம் அவருக்கு செய்கின்ற ஒரு நல்ல ஒரு காரியமாக இருக்கும்.

நாமளும் வந்தோம் ஐயாவிற்கு மரியாதை செலுத்தினோம் நான்கு வார்த்தை பேசினோம் போனோம் என்று சொல்வதை விட இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நம்முடைய தலைவர்கள் எல்லோரும் இங்கே இருக்கிறார்கள் நேரடியாக நம்முடைய லாயிட்ஸ் சாலைக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய காதி கிராப்டில் காதி துணிகளை வாங்கி அதை மக்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் நீங்களும் இன்றிலிருந்து காதி வாங்குங்க அது தான் மகாத்மா காந்தி அவர்களுக்கு நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய நன்றிக்கடனாக இருக்கும் என்பதையும் இந்த நன்னாளில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என அண்ணாமலை தெரிவித்தார்.

Categories

Tech |