கேரளாவில் ஒரு பேக்கரியில் 25 ஆயிரம் பிஸ்கட்டுகளை பயன்படுத்தி தீயம் ஓவியத்தை உருவாக்கியுள்ளனர்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓவியங்களில் ஒன்று தீயம் முகம். இது கேரள பாரம்பரிய சின்னமாக கருதப்படுகிறது. கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ‘பேக் ஸ்டோரி’ என்ற பெயரில் சுமார் 25 ஆயிரம் பிஸ்கட்டுகளை பயன்படுத்தி பாரம்பரியமிக்க தீயம் ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை கேரளாவின் பிரபல கலைஞரான தான் டொன்விசி சுரேஷ் உருவாக்கியுள்ளார்.
கடையின் மையப்பகுதியில் டேபிள்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அதன் மேல் பிஸ்கட்டுகள் மற்றும் சில பேக்கரி பொருட்களை பயன்படுத்தி இந்த தீயம் ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை உருவாக்க சுமார் 15 மணி நேரம் சுரேஷ் ஊழியர்கள் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.