தமிழகத்தில் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக 21 பொருள்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்பவர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு உடன் சேர்த்து ரொக்கப் பணமும் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டதது குடும்ப அட்டைதாரர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து அதிமுகவும், தேமுதிகவும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது. தைப் பொங்கல் தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். தமிழக அரசு ஆண்டுதோறும் பரிசுப் பொருட்களும், பணமும் வாடிக்கையாக வழங்கும். அதேபோல் இந்த ஆண்டும் தைப்பொங்கலுக்குக் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் . இதனால் இது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.