Categories
மாநில செய்திகள்

பெல் & மாருதி நிறுவன முன்னாள் தலைவர் காலமானார்….! பெரும் சோகம்…..!!!!

சிறந்த தொழில் திருப்புமுனை நபருக்கான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகளைப் பெற்ற பிரபலமான BHEL மற்றும் மாருதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி. இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 97. தமிழகத்தில் கருவேலி எனும் ஊரில் பிறந்த கிருஷ்ணமூர்த்தி மாருதியின் தலைவரானபின் அவர் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் நவீன யுகத்தை அறிமுகப்படுத்தினார்.

மாருதி 800 இன் அறிமுகம் மூலம் வாகன சந்தையை நிரந்தரமாக மாற்றியமைத்தார். இந்நிலையில் இவரது தொழிலில் இவர் புரிந்த சாதனைகளுக்காக அரசு இவருக்கு பத்ம விருதுகளை அளித்து கவுரவித்தது. இவரது இறப்புக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பலரும் இவரது இறப்புக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |