Categories
உலக செய்திகள்

பெல்ஜியம்: பதவியை ராஜினாமா செய்த வெளியுறவு அமைச்சர்…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!!

புற்றுநோயால் சிரமப்படும் கணவரை அருகில் இருந்து பார்த்துக்கொள்வதற்காக பெல்ஜியம் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான சோஃபி வில்மஸ் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளாா்.

கடந்த 2019-2020ஆம் வருடம் வரை பிரதமராகப் பொறுப்பு வகித்த வில்மஸ், ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த கிறிஸ்டோஃபா் ஸ்டோனை சென்ற 2009-ஆம் ஆண்டு மணந்தாா். இப்போது ஸ்டோனுக்கு மூளைப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதைத் அடுத்து தன் பதவியை ராஜினாமா செய்வதாக வில்மஸ் தெரிவித்துள்ளாா். இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, என் கணவா் மூளைப் புற்றுநோயால் சிரமப்படுகிறார்.

இதற்கிடையில் பொறுப்புமிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் பதவியைத் தொடா்ந்தால் அவரது அருகில் இருந்து பார்த்துக்கொள்ளவும், தேவைப்படும் சமயத்தில் அவருக்கு ஆறுதல் அளிக்கவும் எனக்கு நேரம் இருக்காது. ஆகவே என் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என சோஃபி வில்மஸ் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ள பிரதமா் அலெக்ஸாண்டா் டிக்ரூ, வில்மஸின் முடிவு அவா் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்துவதாகப் பாராட்டியுள்ளாா்.

Categories

Tech |