மும்பையில் பெற்ற மகளை, மகனுடன் சேர்ந்து தந்தை பாலியல் கொடுமை செய்து வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது தந்தை மற்றும் சகோதரனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அந்த மாணவி தான் படிக்கும் பள்ளியின் ஆசிரியர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவியுடன் சேர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் மாணவி கூறியிருப்பதாவது, ‘தனது தந்தையும், சகோதரனும் சேர்ந்து கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தந்தை மற்றும் சகோதரன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் இருவரையும் வரும் ஜனவரி 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.