தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் ஜெயராம் – முத்துச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் 16 வயது மகள் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சென்ற 2018 ஆம் வருடம் தஞ்சாவூரை சேர்ந்த கென்னடி என்ற சினிமா இயக்குநர், தன் படத்தில் சிறுமியை நடிக்க வைப்பதாக கூறி வேறொருவர் வாயிலாக முத்துச்செல்விக்கு அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து நாளடைவில் கென்னடிக்கும், முத்துசெல்விக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
இது மகளுக்கு தெரியவர, இதை வெளியே சொன்னால் தான் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறி தாய் மிரட்டியுள்ளார். இதன் காரணமாக சிறுமி இதைப்பற்றி வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். அதன்பின் இயக்குநரின் பார்வையானது சிறுமியின் பக்கம் திரும்பியது. அதனை தொடர்ந்து தன் காம ஆசையை முத்துச்செல்வியிடம் கூற, அவரோ மகள் என்றும் பாராது இயக்குநருக்கு சிறுமியை இரையாக்க திட்டமிட்டார். இதனால் சென்ற ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்ற தாய், பாதுகாப்பு எனக்கூறி சிறுமியை கென்னடியுடன் இருக்க செய்துள்ளார். அன்று ஒரேநாள் கென்னடி சிறுமியை, 4 முறை வலுக்கட்டாயமாக பாலியல் வன் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையில் தாயே சிறுமிக்கு காபியில் தூக்கமாத்திரை கலந்துகொடுத்து இதனை செய்யுமாறு இயக்குனரிடம் சொன்னது தான் பெரிய கொடுமை ஆகும். இந்நிலையில் கோடை விடுமுறைக்கு சித்தப்பா வீட்டிற்கு சென்ற சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அப்போது சித்தப்பா விசாரிக்கையில் சிறுமி நடந்தவற்றை கூறி கத றிஅழுதார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி தாய் முத்துச்செல்வியை கைது செய்த காவல்துறையினர் இயக்குநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.