அடையாளம் தெரியாத மர்ம விலங்குகள் ஆடுகளை கடித்து உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் சுரேஷ்குமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். சுரேஷ்குமார் தனது வீட்டில் 9 செம்மறி ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இவர் இரவு தூங்க செல்வதற்கு முன்பு வீட்டு வாசலில் செம்மறிஆடுகளை கட்டி வைத்துவிட்டு தூங்க சென்று உள்ளார்.இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் பயத்தில் மிகவும் சத்தமாக கத்தியுள்ளன. இதனையடுத்து ஆடுகளின் சத்தம் கேட்டு சுரேஷ்குமார் வெளியில் வந்து பார்த்தபோது ஆடுகளை கடித்து விட்டு அடையாளம் தெரியாத மர்ம விலங்குகள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது.
மேலும் பிள்ளைகள் போல் வளர்த்த ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு சுரேஷ்குமார் மிகவும் மனமுடைந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளையும், அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஆடு வளர்த்து வரும் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.