அமெரிக்காவிலுள்ள 22 மாத குழந்தை ஒன்று தனது தாயின் இணையத்தை பயன்படுத்தி 1.4 லட்சம் மதிப்புடைய மரச்சாமான்களை ஆர்டர் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பிரமோத் மற்றும் மது என்ற தம்பதியினர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அலெக்ஸ் குமார் என்ற 22 மாத குழந்தை ஒன்று உள்ளது. இதனையடுத்து குமார் தனது தாய் இணையத்தை பயன்படுத்துவதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது தாய் செய்வது போலயே 22 மாத குழந்தையான குமார் இணையத்தில் சுமார் 1.4 லட்சம் மதிப்புடைய மரச்சாமான்களை ஆர்டர் செய்துள்ளார்.
அதன்பின்பு ஆர்டர் செய்த பொருட்கள் வீட்டிற்கு வந்தபோதே குமாரின் பெற்றோர்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.
மேலும் தங்களது மகனின் குறும்பு தனத்தை கண்டு வியந்துள்ளார்கள். இந்த சம்பவம் அரங்கேறிய பின்பு தனது மகள் அறியாதவாறு பாஸ்வேர்டை மாற்ற வேண்டும் என்று அவரது தந்தை கூறியுள்ளார்.