தமிழகம் முழுவதும் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஜனவரி 23ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன் காரணமாக ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
பெற்றோர்களே ரெடியா?…. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 27ஆம் தேதி…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
