Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே…. மதிப்பெண்ணை வைத்து மாணவர்களை எடை போடாதீங்க…. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!!

தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை பொது தேர்வு தொடங்குகிறது. அதுமட்டுமல்லாமல் பொதுத்தேர்வில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெற்றோர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அதாவது மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மதிப்பிட வேண்டாம் என்றும் நம் குழந்தைகளின் திறமை மற்ற குழந்தைகளுக்கு இல்லை என நம்பிக்கை ஊட்டும் விதமாக பெற்றோர் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் தனித்திறமையை வளர்த்தால் வெற்றி நிச்சயம் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |