இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையிலும் செல்போன் உள்ளது இதனால் ஆன்லைன் மூலம் நடக்கும் ஆபாச உரையாடல்கள் சிறுவர்களிடம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஆபாச உரையாடலில் பங்கேற்பதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதாவது குழந்தைகளிடம் ஆரம்பத்தில் இருந்தே ஆன்லைனில் யாருடன் பேசுகிறீர்கள், ஆன்லைனில் அறிமுகமாகும் நண்பர்களிடம் பேண வேண்டிய உறவு என்ன என்பது குறித்து உரையாடுங்கள்.
குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் அவர்களை கண்காணிக்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் அவர்கள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துங்கள். ஏற்கனவே உங்கள் குழந்தைகள் ஆபாச உரையாடல்களில் பங்கேற்றிருந்தது தெரியவந்தால் அவர்களை கண்டிக்காதீர்கள். நிலையை எடுத்து சொல்லி புரிய வையுங்கள். இவ்வாறு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.