Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவலை வேண்டாம்….. புத்தம்புது முயற்சி….. ஜியோ அறிவிப்பு…!!

குழந்தைகளை கவரும் விதமாக ஜியோ நிறுவனம் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜியோ தொலைதொடர்பு துறையில் கால் பதித்ததை தொடர்ந்து, மக்களுக்குத் தேவையான பல விஷயங்களை கவர்ந்து மேற்கொண்டு வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அந்தவகையில், ஜியோமியூசிக், ஜியோ டிவி, ஜியோ மார்ட்  என மக்கள் சமீபத்தில் அதிகம் பயன்படுத்தக் கூடிய அனைத்து விஷயங்களிலும் கால் பதித்து விட்டது.

தற்போது கொரோனா பாதிப்பால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கினால்  பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை பயின்று வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் கல்வி மீது மிகுந்த அக்கறை இருக்கும். இதை உணர்ந்த ஜியோ நிறுவனம்,யூஎஸ்பி ஸ்டூடியோ உடன் இணைந்து குழந்தைகளுக்கான கல்வி வீடியோக்களை தயாரிக்க உள்ளது. இதன்படி,

ஜியோ  வாடிக்கையாளர்கள் கிட்ஸ் first,  கிட்ஸ் டிவி இந்தியா, ஜூனியர் ஸ்குவாட் ஹிட் சாங்ஸ்,டாப் நர்சரி ரைம்ஸ், கிட சேனல் இந்தியா, பாப் தி ட்ரெயின் லிட்டில் ட்ரீஹவுஸ் ரைம்ஸ், பார்மசி நர்சரி ரைம்ஸ்  ஆகிய 8 கல்வி செயலிகளை  இலவசமாக பயன்படுத்தலாம் என கூறியுள்ளது. 

Categories

Tech |