அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் தாய் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய கையில் வைத்திருந்த ஒரு வயது குழந்தையை பார்த்த Rebecca Lanette Taylor (வயது 49) என்ற பெண் அவர்களை நெருங்கி சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுவனின் தங்க நிற தலை முடியும், நீலநிறக் கண்களும் அழகாக உள்ளது.
அவனுடைய விலை என்ன ? என்று சிறுவனின் தாயிடம் Rebecca கேட்டிருக்கிறார். அதனை வேடிக்கையாக எடுத்துக் கொண்ட அந்த சிறுவனின் தாய் சிரித்துக்கொண்டே மெல்ல நகர்ந்தார். ஆனால் Rebecca காரில் நான் 250,000 டாலர்கள் வைத்திருக்கிறேன் சிறுவனை கொடுத்தது விடுமாறு சிறுவனின் தாயிடம் கேட்டிருக்கிறார்.
உடனே சிறுவனின் தாய் விலகிச் செல்லுங்கள் என்று சத்தமிட்டிருக்கிறார். இருப்பினும் Rebecca அந்த சிறுவனை விடாமல் துரத்தி சென்றிருக்கிறார். இதையடுத்து சிறுவனின் தாயார் காவல் நிலையத்தில் Rebecca மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் Rebecca-ஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.