Categories
சென்னை மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. 9 வயது சிறுமியை கடித்து குதறிய நாய்…. பதற வைக்கும் காட்சி….!!!!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமியை நாய் கடித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். அவர் வளர்த்து வந்த நாய் அதே குடியிருப்பில் வசித்து வரும் பக்கத்து வீட்டு 9 வயது சிறுமியை கடித்து குதறியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை நாய் துரத்திச் சென்று கடித்து குதறிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதனைக் கண்ட பாதுகாவலர்கள் நாயை துரத்தியதால் சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் நாய் உரிமையாளர் விஜயலட்சுமியை காவல்துறையினர் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். தற்போது சிறுமியை நாய் துரத்தி கடித்து குதறிய காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |