மத்திய பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை அவருடைய தாத்தா பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆறு வயதான சிறுமியை அவருடைய தாய் வழி தாத்தா மற்றும் மற்றொரு நபர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சிறுமியின் மூன்று வயது தம்பியின் கண்முன்னே இது நடந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகாரளிக்க, சிறுமியின் தாத்தாவையும் சஞ்சய் என்ற நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். எனவே இந்த சம்பவம் பெற்றோர்களுக்கு ஒரு தகுந்த பாடமாக இருக்கும். தங்கள் குழந்தைகளை யாரையும் நம்பி எப்போதும் விட்டுச் செல்வது மிகவும் ஆபத்தானது.