Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. 2 மாத குழந்தையை தூக்கி சென்ற குரங்கு…. என்ன பண்ணுச்சுனு நீங்களே பாருங்க?….

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 2 மாத பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற குரங்குகள் தண்ணீர் தொட்டியில் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை காணவில்லை என்று பல இடங்களில் தேடிய பெற்றோர்கள், தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் குழந்தையின் உடலை கண்டெடுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பாட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் மொட்டை மாடியில் 2 மாத குழந்தையுடன் மூதாட்டி ஒருவர் தூங்கியுள்ளார். அப்போது மாடிகளில் விளையாடிக் கொண்டிருந்த குரங்குகள், வீட்டின் கதவு திறந்திருந்ததால் வீட்டில் புகுந்து குழந்தையை தூக்கிச் சென்றுள்ளது. மூதாட்டியின் அஜாக்கிரதையால் நடந்தேறிய இந்த சம்பவத்தில் மொட்டை மாடிகளில் உள்ள தண்ணீர் தொட்டியில் குரங்குகள் குழந்தையை வீசியுள்ளது.

தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி கண்விழித்து குழந்தை காணாமல் போனதை அறிந்து குழந்தையின் பெற்றோர்களுடன் தேடியுள்ளார். பின்னர் தண்ணீர் தொட்டியில் குழந்தையின் உடலை கண்டெடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே குரங்குகள் அடிக்கடி வீட்டினுள் நுழைந்து குழந்தையை தூக்க முயற்சி செய்ததாக குழந்தையின் தாயார் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |