திருவனந்தபுரத்தில் ராகேஷ் என்கிற ஆட்டோ ஓட்டுனரின் மகளான நிவேதிதா முதலாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நிவேதிதா என்கிற அந்த ஐந்து வயது சிறுமி சாப்பிட்ட மிச்சர் தொண்டையில் சிக்கியதால் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.மிக்ஸர் சாப்பிடும் போது அதிலிருந்த கடலை மூச்சுக் குழாயில் சிக்கி மூச்சுத்திணறி சிறுமி உயிரிழந்தார். தனக்கு எந்த ஒரே மகளும் உயிரிழந்துவிட்டதால் கதறித் துடிக்கின்றார் ராகேஷ். மிக்சர் சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகள், சிறுவர்களின் உணவு விசயத்தில், அவர்கள் உணவருந்தும் விசயத்தில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனுடம், கவனத்துடனும் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை விதைத்திருக்கிறது நிவேதிதாவின் மரணம்.
Categories
பெற்றோர்களே உஷார்….. மிக்ஸர் சாப்பிட்ட சிறுமி திடீர் மரணம்…. அதிர்ச்சி….!!!
