Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. மாடியில் இருந்து தவறி விழுந்து 12 வயது சிறுவன் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

கர்நாடக மாநிலம் அடுத்த பெங்களூரு உளுமாவு போலீஸ் எல்லைக்குட்பட்ட காளேணே அக்ரஹார பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். அவர்களின் மகன் ஆதித் (12). அவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். சிறுவனின் தந்தை சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். தாய் மற்றும் சிறுவன் மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென கால் தவறி கீழே விழுந்தான். அதில் சிறுவனின் தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |