Categories
சென்னை மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. பிஞ்சு குழந்தையின் உயிரைப் பறித்த விசில்…. திடுக்கிடும் சம்பவம்….!!!!

சென்னையில் பூந்தமல்லி பகுதியில் உள்ள பத்மாவதி நகரில் ஆனந்தராஜ் மற்றும் வனஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஆனந்தராஜ் காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு தர்ஷன் என்ற மூன்று வயது மகனும், கயல்விழி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில் இன்று வழக்கம் போல வீட்டில் உள்ள விளையாட்டுப் பொருட்களை வைத்து ஒரு வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விசிலை குழந்தை விழுங்கியுள்ளது.

அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அக்குழந்தை உடனே மயங்கியது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை தட்டி எழுப்ப முயற்சித்தனர். பின்னர் குழந்தையின் முதுகில் தட்டிய போது வாயிலிருந்து விசில் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்கள் உடனே மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |