Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. செல்போனை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து… கடும் எச்சரிக்கை….!!!!

அன்றைய காலத்தில் அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது நிலாவை காட்டி தான் ஊட்டினார்கள். ஆனால் இன்று நடப்பது என்னவோ வேறு. செல்போனை கொடுத்து சாப்பாடு ஊட்டுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு விளையாட்டுகள் ஓடியாடி விளையாடி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் இன்று என்னவோ உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்து விளையாட்டுகளையும் செல்போன் மூலமாக விளையாடுகிறார்கள்.

அதுமட்டுமன்றி குழந்தை பிறந்த சில நாட்களிலேயே செல்போனை பெற்றோர்கள் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் அதனால் பின்னரே ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி அவர்கள் அறிவதில்லை. அவ்வாறு குழந்தைகள் செல்போன் நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ளுங்கள். அதிக நேரம் குழந்தைகள் செல்போனை பார்ப்பதால் ஓடி ஆட மறந்து விடுகிறார்கள். ஒரே இடத்தில் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சு குழந்தைகளின் கண் பார்வையை பறித்து விடுகிறது.

இரவு நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதால் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாது. இரவு முழுவதும் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதால் பள்ளிக்குச் சென்று குழந்தைகள் அங்கு தூங்கிவிடுகிறார்கள். அதுமட்டுமன்றி நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதால் கண் எரிச்சல் மற்றும் தலை வலி போன்ற பிரச்சனைகள் குழந்தைகளுக்கு ஏற்படும். அதுமட்டுமன்றி மிக விரைவில் எலும்பு தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது.

மேலும் செல்போனை தொடர்ந்து பார்த்தால் குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பாதிப்பு மற்றும் பார்வை குறைபாடு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்ற பாதிப்பு சுமார் 25% அதிகரித்துள்ளது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் செல்போனை பயன்படுத்த கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |