இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. அதன்படி, தற்போது 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு Post office MIS எனப்படும் ஒரு சேமிப்பு திட்டம் மூலம் அதிக வட்டி கிடைக்கிறது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக, பொதுமக்கள் பல்வேறு பொருளாதார இன்னல்களை சந்தித்து வருவதால், அவர்களின் வருவாயை அதிகரிப்பதற்கு பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
அதில் குறிப்பாக, இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடுகளை செலுத்த ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து தற்போது post Office Monthly Income Scheme என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கூட கணக்கு துவங்கலாம். மேலும் இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்தாலே போதும் மாதம் வருவாய் பெறலாம்.
இதன் மூலம் தங்கள் குழந்தைகளின் கல்வி கட்டண தொகையை செலுத்தி விடலாம்.இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 4.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி 6.6 சதவீதம் ஆகும். இந்த சேமிப்பு திட்டத்திற்கான மெச்சூரிட்டி காலங்கள் 5 ஆண்டுகள் ஆகும்.எடுத்துக்காட்டாக 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 1,100 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும். மேலும் 5 ஆண்டுகள் முடிவில் 66,000 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும்.
தற்போது 3.50 லட்சம் ரூபாய் முதலீடாகக் செலுத்தினால், மாதம்ந்தோறும் 1925 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும். இந்த தொகை குழந்தைகளின் எதிர்கால கல்வி செலவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பின்னர், இந்தத் திட்டத்தில் 4.50 லட்சம் ரூபாய் முதலீடாக செலுத்தினால் 2,475 ரூபாய் வட்டி தொகை கிடைக்கிறது. இந்தத் திட்டம் மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும் இருக்கிறது. அதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் post Office MIS திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.