கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் பல மாநிலங்களில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனாவில் இருந்து படிப்படியாக மக்கள் மீண்டு வரும் நிலையில் பள்ளி குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஒரு பக்கம் உருமாறிய கொரோனா வைரஸின் ஓமிக்ரான் தொற்றின் பிஏ 5 வகை வைரஸ் பரவல் அதிகமாக பரவி வருகிறது. மேலும், மறுபக்கம் 5 வயது குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் இடுக்கியில் நெடுங்கண்டம் கல்லார் பகுதியில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளியில் 20 குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்பட்டது, அதனை தொடர்ந்து அந்த குழந்தைகளை சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு தக்காளி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.