பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனாவுக்கு பிறகு புதுச்சேரியில் நேற்று முதல் பள்ளிகள் முழு நேரமாக இயங்க தொடங்கின. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் அரசு பள்ளிகளில் ஆய்வு செய்தார். அப்பொழுது மாணவிகளுடன் சேர்ந்து காலை உணவான பாலை அருந்தினார்.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். முழுநேரமும் பள்ளிகள் இயங்குவது, மாணவர்களுக்கு முழு தேர்வுகள் நடத்துவது குறித்தும் இரு விதமான கருத்துக்கள் உள்ளன. இது குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன் பெற்றோர்களின் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என விளக்கமளித்துள்ளார்.