இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லீஸ்டிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பிரதமர் பதவிக்கான ஓட்டுப் பதிவு என்று ஐந்து மணிக்கு நிறைவடைகின்றது. 1.60 லட்சம் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபாலில் அல்லது இணைய வழியில் வாக்களிக்கின்றார்கள். இதனை முன்னிட்டு ரிஷி சுனக் லண்டன் நகரில் வெம்பிலியிலுள்ள கச்சேரி அரங்கில் நேற்று முன்தினம் தனது கடைசி பிரச்சார கூட்டத்தில் பெற்றோர் யாஷ்விர், உஷா மற்றும் மனைவி அக்ஷதா மூர்த்தி போன்றவருடன் தோன்றி பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசிய போது இந்த இறுதி கட்ட பிரச்சாரம் எனக்கு சிறப்புமிக்கது. ஏனென்றால் என்னை பொது வாழ்க்கையில் ஈடுபட தோண்டிய இரண்டு பேர் அதாவது என் அம்மா அப்பா இங்கே இருக்கிறார்கள். அவர்களின் சேவையையும் மக்களும் அவர்கள் செய்த செயல்களும் தான் நான் அரசியலில் குதிப்பதற்கான உத்வேகத்தை தந்தது. மேலும் அம்மா அப்பா எப்போதும் நீங்கள் தியாகம் செய்ததற்கும் உங்கள் குழந்தைகளுக்கு உங்களது வாழ்க்கையை விட சிறப்பான வாழ்க்கை அளிக்க பாடுபடுவதற்கும் நன்றி கூறிக் கொள்கின்றேன். மேலும் கடின உழைப்பு, நம்பிக்கை, குடும்பத்தின் மீதான உங்களின் பாசம் போன்றவற்றால் நமது நாட்டில் யாரும் எதையும் சாதிக்க முடியும் அதற்கு எல்லையே கிடையாது என எனக்கு கற்பித்திருக்கின்றீர்கள் அதற்காக நன்றி.
மேலும் எனது மனைவி அற்புதமானவர், அன்பானவர் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக தனது உயரங்களை விட்டுக் கொடுத்து எளியவனான என்னை தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி. நான் எனது குழந்தைகளையும் மனைவியையும் அளவற்று நேசிக்கிறேன். ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த சில வருடங்களாக அவர்களின் வாழ்க்கையில் நான் உடன் இருக்க விரும்பியும் அது முடிந்ததில்லை. இந்த நிலையில் நான் நமது நாட்டை பற்றி மிகுந்த அக்கறை கொண்டிருக்கின்றேன் கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றை என்னால் வழங்க முடியும் என நான் நினைக்கின்றேன். அதனால் தான் இந்த போட்டியில் இருக்கின்றேன். மேலும் மக்களின் ஆதரவை பெறுவதில் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று முடிகின்ற பிரதமர் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு ஐந்தாம் தேதி முடிவு அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால் வெள்ளையர் அல்லாத முதல் இங்கிலாந்து பிரதமர் என்றும் சிறப்பை பெறுவார்.