சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளு வண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு சுபாஷ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுபாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுபாஷ் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டள்ளார்.