பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டியை சேர்ந்த பவதாரணி(25) என்பவர் தனது கணவருடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஒரு வருடமாக நான் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார்(32) என்பவரை காதலித்து வந்தேன். நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் தலைமையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம். இதனை அடுத்து பெற்றோரால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.