Categories
தேசிய செய்திகள்

பெரும் ஷாக்…! தூக்க கலக்கத்தில் பல் துலக்கிய மாணவி…. உயிரே போன பரிதாபம்…!!!

கர்நாடகாவில் எலி மருந்தால் பல் துலக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சுலியா  மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஷர்வயா. கடந்த 14ஆம் தேதி வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இவர் தூக்க கலக்கத்தில் எழுந்து பல் துலக்குவதற்காக அவரது பிரஷ்சை  எடுத்து பேஸ்ட்டை அப்ளை செய்துபல் துலக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அதன் சுவையை உணர்ந்த ஷர்வயா இது பேஸ்ட் இல்லை என்பதை உணர்ந்து  அது என்ன என்பதை பார்த்துள்ளார்.

அப்போது டூத்பேஸ்ட் க்கு பதிலாக எலி மருந்து வைத்து பல்துலக்கி அது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஷர்வயா  வாயை சுத்தம் செய்துவிட்டு, மறுபடியும் பேஸ்ட் எடுத்து பல் துலக்கிவிட்டு பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இதை வீட்டில் கூறினால் தன்னை கிண்டல் செய்வார்கள் என எண்ணி கூறாமல் இருந்துள்ளார். இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் தனது பெற்றோரிடம் எலி மருந்தில் பல் துலக்கி விஷயத்தை கூறியுள்ளார்.

இதையடுத்து மங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிர் இழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |