பாதுகாப்பு படை அதிகாரிகள் 3 மாவோயிஸ்டுகளை சுட்டு கொலை செய்துள்ளனர்.
சத்தீஷ்காரில் உள்ள பல இடங்கள் மற்றும் வனப்பகுதிகளில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளின் அதிகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் ஊருக்குள் புகுந்து அரசியல்வாதிகள், பாதுகாப்பு படை உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிஜாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொம்ரா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி மத்திய ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை, மாவட்ட ரிசர்வ் படை, போலீசார் ஆகியோர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 40 மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஒரு பெண் உள்ளிட்ட 3 மாவோயிஸ்டுகளை சுட்டு படுகொலை செய்துள்ளனர்.