யானை தோட்டத்திற்குள் நுழைந்து வீட்டை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடலுர், சோலைக்காடு, கொக்குபாறை ஆகிய மலை கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் அமைந்திருக்கும் தோட்டத்திற்குள் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பூதபாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் காட்டு யானை புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்துள்ளது.
மேலும் தோட்டத்திற்குள் இருந்த வீட்டையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூதபாண்டி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்துள்ளனர். எனவே யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.