Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பிறந்து 4 நாட்களான “பெண் குழந்தை கடத்தல்”…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!!!

 குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி குமரன் நகரில் யூனிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யபாரதியை கடந்த 27-ஆம் தேதி பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று காலை திவ்யபாரதி தூங்கி கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பத்ரிநாராயணன் மருத்துவமனைக்கு சென்று குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் மருத்துவமனையில் கேமரா இல்லாததால் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் மருத்துவமனைக்குள் நுழைந்து  2  பெண்கள் குழந்தையை கடத்தி சென்றது பதிவாகியுள்ளது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  பத்ரிநாராயணன்  6  தனிப்படை குழு அமைத்து  குழந்தையை  கடத்தியவர்களை கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையை கடத்திய  2 பெண்களையும் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர். இதனால்  மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |