திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தாடி பத்திரி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் மல்லேப்பள்ளி சுரேஷ் ரெட்டி(33). இவர் தான் காதலித்து வந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டிருக்கின்றார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் பெண் பெற்றோரின் விருப்பப்படி தான் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் காதலியின் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.