அரூர் அருகே மகனை துப்பாக்கியால் சுட்ட போது குண்டு பாய்ந்து தெருவில் விளையாடி 5 சிறுவர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சித்தேரி நலமங்காடு பகுதியைச் சேர்ந்த காரிய ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கண்ணகி. காரியராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த காரியராமன் மனைவியிடம் தகராறு செய்திருக்கின்றார். இதை அவரது மகன் ஏழுமலை தடுத்துள்ளார். அப்போது தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த காரியாமன் வீட்டில் இருந்து நாட்டு துப்பாக்கி எடுத்துக்கொண்டு மகனை நோக்கி சுற்றுள்ளார். இதில் ஏழுமலை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
நாட்டுத் துப்பாக்கியில் இருந்து சிதறிய பால்ரஸ் குண்டுகள் வீட்டு சுவரில் பட்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பாய்ந்து உள்ளது. இதில் ரவி(13) சாரதி(12) பிரபாத்(11) திருமலைவாசன்(13) அனிதா(16) போன்ற ஐந்து பேர் மீதும் குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த பகுதி மக்கள் 5 சிறுவர்களையும் சித்தேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது பற்றி புகாரின் பேரில் அரூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கரியராமனை தேடி வருகின்றார்கள்.