Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளம்…. அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்….!!!!!

மிகவும் பரபரப்பான சாலையில்  திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம்  மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நெய்டா பகுதியில்   கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அஸ்ட்ரா சாலை இடிந்து நிலையில் இருந்தது. இந்நிலையில்  அப்பகுதியில் உள்ள சாக்கடை, குடிநீர் குழாய்களில்  ஏற்பட்ட உடைப்பை  சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று சாலை திடீரென 20  அடி ஆழத்திற்கு இடிந்து உள்வாங்கியுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதனை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |